Praptham Real Estate Academy

ரியல் எஸ்டேட் தொழில் கல்விக்கான முதல் அகாடமி

ப்ராப்தம் ரியல்எஸ்டேட் அகாடமி பிரைவேட் லிமிடெட்.

ப்ராப்தம் ரியல்எஸ்டேட் அகாடமி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சா.மு.பரஞ்சோதி பாண்டியன் மற்றும் வே. மீனா ஆகிய இரண்டு அர்ப்பணிப்புள்ள தொழில் முனைவர்களால் 2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. சா.மு.பரஞ்சோதி பாண்டியன் அவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் நாடு முழுவதும் களப்பணி செய்து பெற்ற பட்டறிவையும் அவருக்கு

 உறுதுணையாக கடந்த 12 ஆண்டுகளாக வே. மீனா அவர்கள் சேர்ந்து தான் பெற்ற அனுபவங்களையும் கொண்டு சாமானியர்களுக்கு நிலம் சம்மந்தப்பட்ட ரியல்எஸ்டேட் கல்வியை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த அகாடமி தொடங்கி வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கையில் இந்த செயல் முறைகள் (யுக்திகள்) திரு. உத்தம் குமார் அவர்களுக்கு பிடித்துவிட்டபடியால் அவரும் 2024 ஆம் ஆண்டு இந்த பயணத்தில் தன்னை இணைத்து கொண்டார்.

இந்த நிறுவனம் தமிழகம் ரியல் எஸ்டேட் தொழில் கல்விக்கான முதல் அகாடமி இது தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள வருவாய் துறை, நில நிர்வாக துறை, நில வரி திட்ட துறை, நில அளவை துறை, நில சீர்திருத்த துறை, பதிவுத்துறை, வீட்டு வசதி துறை, CMDA, DTCP,PPA ஆகிய துறைகளில் உள்ள கொள்கைகளையும், வேலை திட்டங்களையும் சாமானிய மக்களுக்கு புரியும் படி சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

Meet Our Partners

Stay in the loop